திட்டக்குடி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சேவைப்பணி ஏற்பு விழா இடைச்செருவாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திட்டக்குடி அரிமா சங்கத்தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார்.
அன்னை மாதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இராஜவெங்கடேசன் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக்குமார் சோரடியா, புதிய நிர்வாகிகளை சேவை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சிவக்குமார், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார். முதலாம் துணை ஆளுநர் கீதா கமலக்கண்ணன் சேவைப் பணியை தொடக்கி வைத்தார்.
மண்டலத் தலைவர் சுந்தரவடிவேல், வட்டார தலைவர் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், 2018-19-ஆம் ஆண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகச் செயலராக கலைச்செல்வன், சேவை திட்ட செயலராக ரவிச்சந்திரன், பொருளாளராக சுப்ரமணியன், துணைத் தலைவர்களாக பொன்சாமி, சரவணன், உறுப்பினர் சேர்க்கை நிர்வாகியாக பூமிநாதன், மக்கள் தொடர்பு நிர்வாகியாக ஜெயக்குமார், நிர்வாகிகள் ஆறுமுகம், சண்முகம் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
தில்லி மகளிா் ஆணையத்தை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும்: லதா குப்தா

வளைகுடா நாடுகளில் தொடரும் தாக்குதல்கள்: பின்னணியில் ஈரான் ஆதரவு அமைப்புகள்

வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


