ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை: என்எல்சி நிதி வழங்கக் கோரிக்கை 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைய என்எல்சி இந்தியா நிறுவனம் நிதி வழங்க வேண்டுமென நெய்வேலி மக்கள் நல மன்றம் மற்றும் தமிழர் சமூக அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்தனர்.
Updated on
1 min read

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைய என்எல்சி இந்தியா நிறுவனம் நிதி வழங்க வேண்டுமென நெய்வேலி மக்கள் நல மன்றம் மற்றும் தமிழர் சமூக அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்தனர்.
 இந்த அமைப்புகள் சார்பில் சார்பில், 19-ஆவது உலக தாய்மொழி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
 இதையடுத்து, அமைப்பின் தலைவர் மு.பெரியார் பேரன், உறுப்பினர்கள் லட்சுமணன், அசோக்குமார், அண்ணாமலை, சந்திரசேகரன் ஆகியோர் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமனை சந்தித்தனர். அப்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைய செலுத்த வேண்டிய கட்டணத்துக்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளும் நிதி வழங்கி வருகின்றன. இதேபோல, என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக பெருந் தொகையை தமிழ் மொழிக்காக வழங்க வேண்டுமென அந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com