ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு நிதியளிப்பு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் சார்பில் ரூ. ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டது.
Updated on
1 min read

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் சார்பில் ரூ. ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டது.
 இந்தத் தொகையை அண்மையில் சென்னை அடையாறில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விஜயராகவனிடம், அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப் புல முதல்வர் வி.திருவள்ளுவன், தமிழியல் துறைத் தலைவர் அரங்க.பாரி ஆகியோர் வழங்கினர்.
 உதவிப் பேராசிரியர் ஜா.ராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் நா.வரதராஜன், தி.பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com