குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்
குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, காலிக் குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, காலிக் குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் கூத்தப்பாக்கத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, கடந்த 12 ஆண்டுகளாகப் பழுதடைந்து செயல்படாமல் உள்ளதாம். இதனால், இந்தத் தொட்டியிலிருந்து குடிநீர் பெற்று வந்த பாரதியார் நகர், வெங்கடேச நகர், சுந்தர் நகர், வைத்திலிங்கபுரம் பகுதியினர் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தாற்காலிகமாக அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தண்ணீர் நகர் ஒவ்வொன்றுக்கும் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறதாம்.
எனவே, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியைத் புதிதாக கட்ட வேண்டும். புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து முழுமையாக குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாம். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கூத்தப்பாக்கத்தில் புதன்கிழமை கட்சி நிர்வாகி கே.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...