மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததால், சாவு எண்ணிக்கை 2-ஆக உயந்தது.
கடலூர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் விமல் (32). செவ்வாய்க்கிழமை மாலை தனது சகோதரி தென்றல் (34), அவரது மகன் நவிலன் ஆகியோருடன் கடலூரிலுள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பம் வந்த போது, அந்த வழியாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவிலன், தென்றல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், தென்றல் புதன்கிழமை உயிரிழந்தார். இந்த மினி லாரி இரு ஆட்டோக்கள், ஒரு கார் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

