கலப்புத் திருமணம் செய்தவர்கள் அரசின் உதவித் தொகை கோரி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம், அம்பேத்கர் நிறுவனத்தின் மூலம் சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த கலப்புத் திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளும் இதர வகுப்பினருக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.2.50 லட்சம் நிதி உதவி வழங்கி மாநில அரசின் மூலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மனுதாரர் மனுவுடன் கல்விச் சான்று, மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும், திருமண அழைப்பிதழ், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கலப்பு திருமணச் சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கலப்பு திருமணச் சான்று, அரசு பதிவு பெற்ற வழக்குரைஞரிடம் ரூ.10-க்கான ஆணை பத்திரம் அசல், முதல் திருமணச் சான்று, திருமண பதிவுச் சான்று, மனுதாரர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், மக்களவை அல்லது சட்டப் பேரவை உறுப்பினர் பரிந்துரைக் கடிதம், வங்கியில் இருவரும் சேர்ந்து தொடங்கப்பட்ட கூட்டு வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
சட்டப்படியான திருமண வயது உடையவர்கள், கலப்பு திருமணமான ஒரு ஆண்டுக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

கோவை தெற்குத் தொகுதியில் திமுக பொறியாளா் அணி பிரசாரம்

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

