வடலூரில் தொடரும் வாகன நெரிசல்: போக்குவரத்து காவலர்களை நியமிக்கக் கோரிக்கை
வடலூர் நகரில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவலர்களை போதிய அளவில் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


வடலூர் நகரில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவலர்களை போதிய அளவில் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரமான வடலூரில் வள்ளலார் நிறுவிய தரும சாலை அமைந்துள்ளது. இங்கு தினமும் திரளானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், அதிகளவில் கல்வி நிறுவனங்களும் உள்ளன. சென்னை - கும்பகோணம், கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் வடலூர் நகரின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதனால், காலை, மாலை வேளைகள் மட்டுமின்றி, நகரில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் சீரற்ற முறையில் நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வடலூரில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து போலீஸார் இருவர் பணியில் இருந்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்தக் காவலர்கள் மாவட்ட காவல் துறையால் வேறு பகுதிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இதனால் வடலூரில் தற்போது, உதவி ஆய்வாளர் மட்டும் பணியில் உள்ளார். போதிய காவலர்கள் இல்லாததால் போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் கோவி.கல்விராயர் கூறியதாவது: வடலூர் நகரில் சாலை ஓரங்களில் வாகனங்கள் முறையற்ற வகையில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சிதம்பரம், விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன. இதை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளுக்கு முன் நிறுத்தப்படும் வாகனங்களையும் முறைப்படுத்த வேண்டும். மேலும், போதிய எண்ணிக்கையில் போக்குவரத்துக் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...