நெய்வேலியில் மாணவியை செல்லிடப்பேசியில் படம் பிடித்த கேந்திரிய வித்யாலய பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
நெய்வேலி, வட்டம் 3-இல் உள்ள இந்தப் பள்ளியில் வட மாநிலத்தைச் சேர்ந்த நயன்பிநாக்கர் (32) என்பவர் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை மிரட்டி தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்த மாணவி ஒருவரை மிரட்டி தனது செல்லிடப்பேசியில் படம் எடுத்தாராம்.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஓவிய ஆசிரியரை தாக்கினர். பின்னர் அவரை நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்த செல்லிடப்பேசியை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் மாணவிகளின் படம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் நயன்பிநாக்கரை சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





