தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

தென்குத்து புதுநகர் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு!

தென்குத்து புதுநகர் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:08 am

தென்குத்து புதுநகர் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வாணதிராயபுரம் ஊராட்சியில் தென்குத்து புதுநகர், கல்லுக்குழு கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாணதிராயபுரம் ஊராட்சியானது என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம்-1ஏ பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக வைக்கப்படும் வெடியால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைகின்றனவாம்.
 அந்த வகையில், தென்குத்து புதுநகர், கல்லுக்குழி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு பழுதடைந்துவிட்டதாம். இதனால், கடந்த 2 மாதங்களாக இந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். என்எல்சி நிர்வாகம் லாரிகள் மூலம் இந்தப் பகுதியில் குடிநீர் வழங்கி வருகிறது. அதுவும், 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், இது தங்களின் தேவைக்கு போதவில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே, குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) அசோக்பாபு கூறியதாவது: வாணதிராயபுரம் ஊராட்சி, தென்குத்து புதுநகரில் ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட பழுதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்எல்சி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
 இந்தப் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்தேத்கத் தொட்டி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.12.13 லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விரைவில் அமைத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.