தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கல்லூரி மாணவ, மாணவிகளிடையே படைப்பாற்றல், பேச்சாற்றலை வளர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் நடத்தி, பரிசுகள் வழங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் போட்டிகள் செப். 14-ஆம் தேதி மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கல்லூரிகளில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மாணவர்களை கல்லூரியே தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
இதற்கு முன்பு ஒரே போட்டியில் இரண்டு முறை பரிசு பெற்றவர்கள் அதே போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 7 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
ரஷியா அச்சுறுத்தல்: மத்திய கிழக்கு உக்ரைனில் மக்கள் வெளியேற உத்தரவு!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


