8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை 

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திட்டக்குடி பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திட்டக்குடி பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
போராட்டத்தின் போது, மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் தூர்வாரிய பணியில் நடைபெற்ற முறைகேடுகள், அதற்குத் துணையாக செயல்பட்ட அரசு அதிகாரிகளைக் கண்டித்தும், வெள்ளாற்று வடிநிலத் திட்டத்தின் கீழ் வெலிங்டன் ஏரியின் அணையைச் செப்பனிட வலியுறுத்தியும், 2014-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை வெலிங்டன் ஏரியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி சிறு குறு விவசாயிகள் சங்கத் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.