கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அதிமுக, அமமுகவினரால் ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு கடலூரில் நகர மற்றும் ஒன்றிய அதிமுக, மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் அன்னதானம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடலூர் நகரச் செயலரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான
ஆர்.குமரன் தலைமையில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநில மருத்துவர் அணி தலைவர் கே.சீனிவாசராஜா, ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஆறுமுகம், விவசாய அணி செயலர் என்.காசிநாதன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் வ.கந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு, பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் கம்மியம்பேட்டையில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலர் ஜி.ஜெ.குமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன் தலைமையில் கடலூர் முதுநகரில் நடைபெற்ற விழாவில் ஆயிரம் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, மீனவரணி செயலர் தங்கமணி, டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் பிரகாஷ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள்
தி.ரவிச்சந்திரன், ஆதிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வண்ணாரப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொழிற்சங்க செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல, கடலூர் பார்வையற்றோர் அரசு சிறப்புப் பள்ளியில் மாணவர்களுக்கும், பாதிரிக்குப்பத்தில் பொதுமக்களுக்கும் வடக்கு ஒன்றிய செயலர் ராம.பழனிச்சாமி தலைமையில் உணவு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமமுகவினர் கடலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பண்ருட்டி: பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பண்ருட்டி காந்தி பூங்காவிலிருந்து நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் வ.ஜானகிராமன், பண்ருட்டி அவைத் தலைவர்
வி.ராஜதுரை, ஒன்றியச் செயலர் என்.கமலக்கண்ணன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.கே.ராமலிங்கம், எம்.கோவிந்தன், டி.ராமதாஸ், முன்னாள் ஒன்றியப் பொருளாளர் எம்.பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் ஓ.ஜெ.கோதண்டம், பாலூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் ஊர்வலமாக வந்து, நான்கு முனைச் சந்திப்பு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.139 கோடி

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரித வளா்ச்சி!
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
