நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

புதிய மாவட்ட கோரிக்கை: விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 8:44 am IST

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் விருத்தாசலம் நகரம் அமைந்துள்ளது. இதேபோல, வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் மாவட்டத் தலைநகருக்கு வெகுதொலைவில் அமைந்துள்ளதால் அந்தப் பகுதி மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இதர அரசு தலைமை அலுவலகங்களுக்குச் சென்று வருவதில் காலம், பண விரயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், விருத்தாசலம் மாவட்டக் கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தினர் புதிய மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இயக்கத் தலைவர் தனவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதி கர்மாங்குடி எஸ்.வெங்கடேசன், சாத்துக்கூடல் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர் உள்பட  நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு விருத்தாசலம் மாவட்டம் அமைக்கக் கோரியும், விருத்தாசலம் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தியும் முழுக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.