மணல் திருட்டால் ரயில் பாலம் இடியும் அபாயம் !
கடலூரில் கெடிலம் ஆற்றில் தொடரும் மணல் திருட்டால் ரயில் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கடலூரில் கெடிலம் ஆற்றில் தொடரும் மணல் திருட்டால் ரயில் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருளான மணலுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், ஆறுகளில் இருந்து தலைச் சுமையாகவும், இரண்டு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களிலும் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மணல் திருட்டை முற்றிலும் தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
குறிப்பாக, கடலூர் நகரம் வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டால் ரயில் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் - விழுப்புரம் ரயில் வழித்தடத்தில், கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தையும், கோண்டூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழே சுமார் 26 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், பாலம் தூண்களின் அருகே சிலர் மணலை அள்ளி கடத்தி வருகின்றனர். குறிப்பாக, ரயில் பாலத்தின் அஸ்திவாரம் வரை குழிதோண்டி மணலை திருடி வருகின்றனர். சாக்கு மூட்டைகளில் மணலை அள்ளி அதை இருசக்கர வாகனங்களில் தங்களின் பகுதிகளுக்கு கொண்டுசென்று விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு மூட்டை மணல் ரூ.100 வரை விற்பனையாவதால் இந்த சட்டவிரோதத் தொழிலில் பலர் கூட்டாக இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பாலத்தின் அஸ்திவாரப் பகுதிகள் முழுமையாக வெளியே தெரியும் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளதால், மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்பட்சத்தில் பாலத்துக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில், இந்தப் பாலம் அமைந்துள்ள பகுதியில் ஆற்றின் போக்கானது ஆங்கில எழுத்தான 'ந' வடிவில் உள்ளது. இதனால், பாலத்தின் கீழே அதிகமான நீர்ப் போக்கு சுழலுடன் ஏற்படும். தற்போது, மணல் அள்ளப்பட்டு பாலத்தின் அஸ்திவாரம் வெளியே தெரியும் நிலை உள்ளதால் வெள்ளத்தின்போது அஸ்திவாரம் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்படலாம்.
இந்த ரயில் பாதை வழியாக நாள்தோறும் சுமார் 20 ரயில்கள் வரை சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:
ரயில் பாலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மணல் திருட்டை தடுப்பதோடு, பாலத்தின் அஸ்திவாரத்தையும் உடனடியாகப் பலப்படுத்த வேண்டும். மணல் திருடர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...