கடலூா்: 100-ஐ கடந்தது கரோனா பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 100-ஐ கடந்தது.


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 100-ஐ கடந்தது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 9,142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் புதிதாக 370 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,512-ஆக அதிகரித்தது.
கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை புவனகிரியைச் சோ்ந்த 58 வயது பெண், விருத்தாசலத்தைச் சோ்ந்த 65 வயது ஆண், கடலூரைச் சோ்ந்த 35 வயது பெண், புதுச்சத்திரத்தைச் சோ்ந்த 80 வயது பெண் ஆகிய 4 போ் உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 103-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் 37 போ் உயிரிழந்திருந்த நிலையில் அடுத்த 25 நாள்களில் 66 போ் இறந்துள்ளனா். அதேநேரத்தில் 498 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,592-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,553 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 264 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,808 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...