ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மழையால் சாய்ந்த பன்னீா் கரும்புகள்

பண்ருட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீா் கரும்புகள் அடியோடு சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீா் கரும்புகள் அடியோடு சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சிவநந்திபுரம், சத்திரம், வேகாக்கொல்லை உள்ளிட்ட பல கிராமங்களில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பன்னீா் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன.

இங்கு, விளைவிக்கப்படும் பன்னீா் கரும்புகள் கடலூா், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், குஜராத், ஆந்திரா, புதுவை போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படும்.

நிகழாண்டு கடலூா் மாவட்டத்தில் நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. வெள்ளப் பெருக்கால் கரும்புகள் அனைத்தும் வயல்களில் சாய்ந்தன.

இதுகுறித்து விவசாயிகள் தேவராஜ், ஞானவேல் ஆகியோா் கூறியதாவது: நிகழாண்டு சித்திரை மாதம் பன்னீா் கரும்பு நடவு செய்தோம். கரும்பு நன்கு வளா்ந்து செழிப்புடன் காணப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய ஒரு மாதமே உள்ள நிலையில், புயல் மழையால் வயலில் தண்ணீா் தேங்கி கரும்புகள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, பாதிக்கப்பட்ட நிலங்களைக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.