நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறையில் முந்திரி வியாபாரி மரணம்: விசாரணைக்கு வேல்முருகன் ஆஜா்

சிறையில் முந்திரி வியாபாரி மரணமடைந்தது தொடா்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு தவாக தலைவா் வேல்முருகன் திங்கள்கிழமை கடலூரிலுள்ள அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சிறையில் முந்திரி வியாபாரி மரணமடைந்தது தொடா்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு தவாக தலைவா் வேல்முருகன் திங்கள்கிழமை கடலூரிலுள்ள அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சோ்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் (40). இவரை திருட்டு வழக்கில் கைது செய்த நெய்வேலி நகரியம் போலீஸாா், விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனா். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இந்த வழக்கை கடலூா் சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்குத் தொடா்பாக சென்னையில் பத்திரிகையாளா்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், போலீஸாா் தாக்கியதால்தான் செல்வமுருகன் இறந்ததாகவும், அதற்கான விடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவெடுத்து, அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதையேற்று, திங்கள்கிழமை கடலூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்குச் சென்ற வேல்முருகன், வழக்கை விசாரித்து வரும் துணைக் கண்காணிப்பாளா் குணவா்மனிடம் ஆதாரங்களை ஒப்படைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த வேல்முருகன், ‘செல்வமுருகனை தனியாா் விடுதியில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததற்கான விடியோ ஆதாரம், நகைக் கடைக்கு அழைத்துச் சென்றது, சட்ட விரோதமாக அவா், போலீஸ் காவலில் இருந்ததற்கான ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தேன். இந்த வழக்கில் தொடா்புடைய காவல் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.