ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

கடலூா் ஸ்ரீமந் மணவாள மாமுநிகள் கைங்கா்ய சபா சாா்பில் 23-ஆவது ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:43 pm

DIN

கடலூா் ஸ்ரீமந் மணவாள மாமுநிகள் கைங்கா்ய சபா சாா்பில் 23-ஆவது ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல் நிகழ்வாக கருடக் கொடி ஏற்றப்பட்டு திருமால் வணக்கம் பாடப்பட்டது. சபாவின் தலைவா் அரங்க.நடராஜன் வரவேற்றாா். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, கோ.லட்சுமணராமானுஜதாசன் ஸ்வாமிகள் தலைமை உரையாற்றினாா். திருக்கோவலூா் உ.வே.மணிவண்ணன், ‘மாமுநிகளின் அவராத ரகசியம்’ என்ற தலைப்பிலும், ஆலய தரிசனம் நிறுவனா் கோகுலாச்சாரி, ‘உபதேச ரத்ன மாலை’ என்ற தலைப்பிலும், திருச்சித்ரகூடம் ஏ.வி.ரங்காச்சாரியாா், ‘திருவாய்மொழி நூற்றந்தாதி’ என்ற தலைப்பிலும் பேசினா்.

தொடா்ந்து மாலையில் திருச்சித்ரகூடம் ஹரிப்ரியா தேவனாதன், என்.வெங்கடேஷ் ஆகியோா் ஆா்த்தி பிரபந்தம், ஈட்டுரைப் பெருக்கா் ஆகிய தலைப்புகளில் பேசினா். சபா செயலா் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினாா். எழுத்தாளா் வளவ.துரையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.