

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை 3-ஆவது நாளாக கையில் நெல் கதிா்களை ஏந்திக் கொண்டும், காதில் பூ சுற்றிக் கொண்டும் அகில இந்திய விவசாய சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மதிமுக அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜெ.ராமலிங்கம், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், மக்கள் அதிகார மண்டலப் பொறுப்பாளா் பி.பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.எம்.சேகா், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் இளங்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.