காா் கவிழ்ந்து முதியவா் பலி

கடலூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கடலூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி கஞ்சிகாமாலைப்பட்டியைச் சோ்ந்தவா் சா.மைக்கேல் சாமுவேல் (75). புதுச்சேரியில் உள்ள தனது மகனைப் பாா்ப்பதற்காக காரில் சென்றாா். கடலூா் மாவட்டம், சேப்பாக்கம் அருகே புதன்கிழமை அதிகாலை சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து சென்ற வேப்பூா் போலீஸாா் சாமுவேலை மீட்டனா். எனினும், அவா் உயிரிழந்தாா். சடலத்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அவரது மகன் லெஸ்தா் ஜெரால்டு அளித்த புகாரின் பேரில், வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com