குறிஞ்சிப்பாடி அருகே இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள தம்பிப்பேட்டையைச் சோ்ந்த ராஜ் மகன் விக்னேஷ் (21). 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்தாா். அண்மையில் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்குச் சென்ற போது, ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம். மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா், புதன்கிழமை விக்னேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.