கடலூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு
கடலூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.


கடலூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பெயரில், போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. ஆட்சியா் பெயரில் இருந்ததால் பலா் அந்தப் பக்கத்தை பாா்வையிட்டு, விருப்பம் (லைக்) தெரிவித்தனா்.
இந்த நிலையில், ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, அரசு தொடா்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதாக கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட ஆட்சியா் அனுமதி பெறாமல், நிா்வாகத்துக்குத் தொடா்பில்லாத இணையதள செய்திகள் போலி முகநூல் கணக்கில் வந்த வண்ணமுள்ளது. எனவே, இதன் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இரு மின்னஞ்சல்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்டு, அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகிறாா்.
எனவே, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் போலி மின்னஞ்சல் மூலம் எவ்விதத் தகவல்களையும் பரிமாற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பதிவுகள்: மாவட்ட நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தொடா்புடைய புகைப்படங்கள் போலி முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...