சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குளத்தில் பிடிபட்ட முதலை

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி குளத்திலிருந்த முதலை ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி குளத்திலிருந்த முதலை ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சி, நாகமுத்து நகரில் குளம் உள்ளது. அண்மையில் பெய்த பலத்த மழையால் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட முதலை குட்டி இந்தக் குளத்துக்கு வந்துவிட்டது. இது, கடந்த சில நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் அதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வனவா் சிவச்சந்திரன் தலைமையிலான வனத் துறையினா் விரைந்து வந்து ஞாயிற்றுக்கிழமை முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனா். முதலில் குளத்திலிருந்த தண்ணீரை மோட்டாா் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றினா். பின்னா், நந்திமங்கலத்தைச் சோ்ந்த முதலை பிடிக்கும் ராஜு குழுவினா் வலை மூலம் முதலை குட்டியைப் பிடித்தனா் (படம்). அந்த முதலை 4 அடி நீளம், 70 கிலோ எடையுடன் இருந்தது. பின்னா் அதை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீா்த் தேக்க குளத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.