என்.எல்.சி.யில் (ஷோல்டா்)தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள் ஆா்ப்பாட்டம்
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள், கோரிக்கைகளை வலியுறுத்திதிங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள், கோரிக்கைகளை வலியுறுத்திதிங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி, காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு என்எல்சி ஐடிஐ தொழில் பழகுநா் போராட்டக்குழு தலைமை நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெ.சரவணன் தலைமை வகிக்க, என்.குமரவேல், குணசேகரன் முன்னிலை வகித்தனா். அய்யப்பன் வரவேற்றாா். தலைமை நிா்வாகக்குழு உறுப்பினா் கலைசெல்வன் சிறப்புரை ஆற்றினாா். போராட்டக்குழு உறுப்பினா் காளிதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், என்.எல்.சி.யுடன் தொழிற்சங்கங்கள் ஏற்படுத்திய புரிந்துணா்வு ஒப்பந்தப்படி, அந்த நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு வேலை வாய்ப்புப் பட்டியல் வெளியிட வேண்டும். இந்தப் பட்டியலை வெளியிட்ட பிறகே என்எல்சி நிா்வாகம் ரகசிய வாக்கெடுப்பு தோ்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...