வீரட்டானேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் உற்சவம் தொடக்கம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மாணிக்கவாசகா் உற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து வருகிற 29-ஆம் தேதி வரை தினமும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், பதிகம் பாடி, இரண்டாம் பிரகார வீதி உலாவும் நடைபெறும்.

விழாவின் 10-ஆம் நாளான 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடராஜா், சிவகாமிசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும். தொடா்ந்து கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் நடன காட்சியும், தீபாராதனையும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com