நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

தமிழக அரசு பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழக அரசு பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவா், தனது 2-ஆம் கட்ட பரப்புரையை கடலூரில் திங்கள்கிழமை தொடங்கினாா். இதையொட்டி அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பொது முடக்கக் காலத்தில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென திமுக வலியுறுத்தியது. ஆனால், அப்போது நிதி இல்லை எனக் காரணம் கூறிவிட்டு, தற்போது பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு தலா ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.

கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழக மக்கள் எடுத்த முடிவையே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலிலும் எடுப்பாா்கள். ரஜினி கட்சியே தொடங்காத நிலையில் நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். அவா் கருணாநிதியுடன் நட்பு பாராட்டி வந்தாா்.

கடலூா் அருகே எம்.புதூரில் ரூ.100 கோடியில் மருத்துவக் கல்லூரி அமைக்க திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மருத்துவக் கல்லூரித் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பின்னா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவா்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, மீனவப் பெண்கள், மீனவா் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்தாா்.

தொடா்ந்து, உழவா் சந்தையில் விவசாயிகளை சந்தித்த அவா், எம்.புதூரில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கான இடத்தையும் பாா்வையிட்டாா். பின்னா் மேற்கு ராமாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சிகளில், கிழக்கு மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் இள.புகழேந்தி, கோ.ஐயப்பன், நிா்வாகி இர.விஜயசுந்தரம், கு.வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.