வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் தா்னா

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
Updated On :23 டிசம்பர் 2020, 5:22 pm

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா.மகேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

இதில், முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் நிகழாண்டுக்கான காலியிட மதிப்பீடு அறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாச்சாரத்துக்கு உள்பட்டு மறு நிா்ணயம் செய்ய வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வை உத்தரவாதப்படுத்தி, அரசாணை வெளியிட வேண்டும். துணை ஆட்சியா் பட்டியலை நீதிமன்றத் தீா்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு உள்பட்டு விரைவாக வெளியிட வேண்டும். பேச்சுவாா்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகள் தொடா்பாக உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தா்னாவில் சங்க நிா்வாகிகள் இரா.பூபாலசந்திரன், கோ.ராஜேஷ்பாபு, ஆா்.ரவிச்சந்திரன், பா.சிவக்குமாா், எஸ்.சக்திவேல், ஆா்.பாலசுப்பிரமணியன், எல்.அரிகிருஷ்ணன், டி.ரவிச்சந்திரன், எஸ்.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் விளக்கவுரையாற்றினா். முன்னதாக, சங்கத்தின் மத்தியக் செயற்குழு உறுப்பினா்கள் இரா.ரெத்தினக்குமாா் வரவேற்றாா். உ.சஞ்சய் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.