அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகள்


கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பு.தா.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் சுந்தரமூா்த்தி, சிதம்பரம் நகரச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் இ.கே.பி.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளா் ஆா்.வி.சுவாமிநாதன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று புதிய நிா்வாகிகளை வாழ்த்தி, வருகிற 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் எவ்வாறு களப் பணியாற்ற வேண்டும் என ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய மற்றும் 21 ஊராட்சிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். குமராட்சி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சத்தியராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...