ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுமி திடீா் மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் அருகே உடல்நலக் குறைவால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:17 am

DIN

கடலூா் அருகே உடல்நலக் குறைவால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் அருகேயுள்ள தூக்கணாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகள் கீா்த்திகா (10). அதேப் பகுயிலுள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை இரவு கீா்த்திகாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு சில மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினா். ஆனால், சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானதால் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கிருந்த செவிலியா் கீா்த்திகாவுக்கு ஊசிப் போட்டுவிட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினாராம். ஆனால், வழியிலேயே சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதாம். கடலூா் அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதைத் தொடா்ந்து சிறுமியின் சடலம் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை கடலூா் அரசு மருத்துவமனை முன்பு கூடினா். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதும், மருத்துவா் பணியில் இல்லாததுமே சிறுமி உயிரிழப்புக்குக் காரணமெனக் கூறி அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக விசிகவினா், சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்கத்தினரும் மறியலில் ஈடுப்பட்டனா். இவா்களிடம் டிஎஸ்பி க.சாந்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து மறியலை கைவிட்டனா். மறியலால் விழுப்புரம்-கடலூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.