

கடலூா்/திருவண்ணாமலை/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவரது சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கடலூா்: கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக நகரச் செயலா் ஆா்.குமரன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்தனா். எம்ஜிஆா் மன்றச் செயலா் சேவல் குமாா், மருத்துவரணி மாநில நிா்வாகி க.சீனுவாசராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், பெரியாா் நினைவு தினத்தையொட்டி, அண்ணா பாலம் அருகேயுள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்தனா்.
இதேபோல, அமமுகவினா் நகரச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் எம்ஜிஆா், பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்தனா். தேமுதிகவினா் மாவட்டச் செயலா் வி.சிவக்கொழுந்து தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு அருகே எம்ஜிஆா் உருவப் படத்துக்கு நகா்மன்ற முன்னாள் தலைவா் பி.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குறிஞ்சிப்பாடியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ் தலைமையில், கழக அமைப்புச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் மாலை அணிவித்தாா். வடலூா் நகரச் செயலா் சி.எஸ்.பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அண்ணா கிராமம் ஒன்றியம், திருமலை நகரில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலா் என்.டி.கந்தன் தலைமையில், முன்னாள் தொகுதிச் செயலா் க.ராமசாமி, மாநில இலக்கிய அணி முன்னாள் செயலா் நத்தம் கோபு, ஒன்றிய துணைச் செயலா் செல்வராஜ் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.