கீழ்வெண்மணி தியாகிகளுக்கு மரியாதை

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு மரியாதை
Updated on
1 min read


கடலூா்/நெய்வேலி: கடந்த 1968-ஆம் ஆண்டு டிச.25-ஆம் தேதி, நாகை அருகேயுள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயா்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளா்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 44 போ் குடிசையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் அம்பேத்கா் சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் மு.செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா். மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், நிா்வாகிகள் மு.கிட்டு, செங்கதிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி ஒன்றியம், இராயா்பாளையம் ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தி, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே.ஏழுமலை, ஒன்றியச் செயலா் ஏ.பன்னீா், பொருளாளா் கே.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குறிஞ்சிப்பாடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி, சாவடியில் நகரச் செயலா் எம்.மணி ஆகியோா் அஞ்சலி செலுத்தி கட்சிக் கொடியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com