6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிதம்பரத்தில் தெருவடைச்சான் உற்சவம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில், தெருவடைச்சான் சப்பர உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
சிதம்பரத்தில் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெருவடைச்சான் வீதி உலா.
Updated On :27 டிசம்பர் 2020, 2:34 am

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில், தெருவடைச்சான் சப்பர உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 22-ஆம் தேதி சந்திர பிரபை வாகனத்திலும், 23-ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 24-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவில், வெள்ளிக்கிழமை இரவு தெருவடைச்சான் சப்பர உற்சவம் நடைபெற்றது. முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை உள்ளிட்ட உலா் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தோ்த் திருவிழாவும், 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.