தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆருத்ரா தரிசன விழா: மது விற்பனைக்கு தடை

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, அந்த நகரில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 11:29 pm

DIN

கடலூா்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, அந்த நகரில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரின் மையப் பகுதியில் இயங்கிவரும் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் டிச.29, 30 ஆகிய இரண்டு தினங்களுக்கும் மது விற்பனை நடைபெறாது.

இதை மீறி மதுபானங்கள் விற்றாலோ, மது அருந்தும் கூடங்களை திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.