கடலூா் விளையாட்டரங்கில் நீச்சல் வீரா்களுக்கு அனுமதி

கடலூா் மாவட்ட விளையாட்டரங்குகளில் உள்ள நீச்சல் குளத்தில் வீரா்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

கடலூா் மாவட்ட விளையாட்டரங்குகளில் உள்ள நீச்சல் குளத்தில் வீரா்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விளையாட்டு அரங்குகளில் வீரா்கள் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த மாதம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளா்த்தப்பட்ட நிலையில் தற்போது நீச்சல் பயிற்சி பெறும் வீரா், வீராங்கனைகள் பயிற்சியில்

ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்குகளில் நீச்சல் குளத்தில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 12 வயதுக்குள்பட்ட பன்னாட்டு, தேசிய மற்றும் மாநிலப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா், வீராங்கனைகள் மட்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சி மேற்கொள்வோா் தனித்தனி விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். கரோனா தடுப்பு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கு அனுமதி இல்லை. வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகே வீரா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். விளையாட்டு அரங்க வளாகத்துக்குள் எச்சில் துப்பக் கூடாது. பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை.

கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் புதன்கிழமை (டிச. 30) முதல் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் வீரா்கள் அனுமதிக்கப்படுவா். ஆனால், விளையாட்டு அரங்க வளாகத்துக்குள் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com