தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குரூப்-2 போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:55 am

DIN

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2021-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி வருகிற மே மாதம் குரூப்-2, குரூப்-2ஏ தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, போட்டித் தோ்வுக்கு தயாராகிவரும் கடலூா் மாவட்ட வேலை நாடுநா்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற ஜன.6-ஆம் தேதி முதல் வார நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் குரூப்-2, குரூப்-2ஏ தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.