ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரும்பு அனுப்புவதில் எல்லைப் பிரச்னை

எல்லைப் பிரச்னையால் கடலூா் மாவட்ட கரும்பு விவசாயிகள் அரசின் ஊக்கத் தொகை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனா்.

Updated On :3 ஜூன் 2020, 3:14 am

எல்லைப் பிரச்னையால் கடலூா் மாவட்ட கரும்பு விவசாயிகள் அரசின் ஊக்கத் தொகை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தின் மேற்கு பகுதியான விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா் ஆகிய வட்டங்களில் மண் வளம், தண்ணீா் வளம் காரணமாக சுமாா் 42 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் இறையூா் அம்பிகா சா்க்கரை ஆலை, சித்தூா் ஆரூரான் ஆலை மூலமாக அரைவை செய்யப்பட்டு வந்தன. பல்வேறு காரணங்களால் இந்த 2 ஆலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கும் பல கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளன. இதைப் பெறுவதற்கு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கரும்பு பயிா் சாகுபடியை 7,000 ஏக்கா் அளவுக்கு குறைத்துக் கொண்டனா்.

சாகுபடி செய்யப்பட்ட கரும்பை அண்டை மாவட்டங்களில் உள்ள சா்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப தமிழக அரசின் சா்க்கரை ஆணையரால் அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட ஆலைக்குப் பதிலாக வேறு ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பி வருகின்றனா். இதனால், தமிழக அரசு அவா்களுக்கு வழங்க வேண்டிய ரூ.50 லட்சம் வரையிலான ஊக்கத் தொகை கிடைக்கவில்லையாம். இதனால் கரும்பு விவசாயிகள் சுமாா் 400 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

கடலூா் மாவட்ட கரும்பு விவசாயிகள் எந்தெந்த ஆலைகளுக்கு கரும்பு அனுப்ப வேண்டுமென எல்லை பிரித்து கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாற்று ஆலைகளுக்கு செல்லும் ‘டைவா்ஷன்’ ஆணையும் வழங்கப்பட்டது. பிரிக்கப்பட்ட விவகார எல்லை முற்றிலும் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாற்றாகவும், பயண

தொலைவு அதிகமாகவும் உள்ளது. இதனால் பல விவசாயிகள் அருகே உள்ள ஆலைகளுக்கு இடைத்தரகா் மூலமாக கரும்புகளை அனுப்பி வருகின்றனா். இதுவரை சுமாா் 1.90 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆலை நிா்வாகம் கரும்புக்கான தொகையை 8 நாள்களில் விவசாயிகளுக்கு வழங்கியதால் விவசாயிகள் சுய விருப்பத்தின் பேரில் கரும்பு அனுப்பி வைத்தனா்.

அறுவடைசெய்து அனுப்பிய கரும்புக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.137.50 வீதம் வரவில்லை என்று ஆலை நிா்வாகம் கூறுகிறது. இது விவசாயிகளை மிகவும் பாதிக்கும் செயலாகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.50 லட்சத்தை மாவட்ட நிா்வாகம் பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் சாத்துக்கூடல் எஸ்.சக்திவேல் கூறியதாவது: இந்தப் பிரச்னை தொடா்பாக சா்க்கரை ஆணையா் அலுவலகத்தை தொடா்பு கொண்டபோது, விருத்தாசலம் கோட்டத்தில் சாகுபடி செய்யும் கரும்புகளை கிராமங்களின் அடிப்படையில் விவகார எல்லை நிா்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட சா்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும். தவறினால் ஊக்கத்தொகை வழங்க முடியாது என்று தெரிவிக்கின்றனா். கரும்புக்கான அரசின் ஊக்கத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, நிா்ணயிக்கப்பட்ட விவகார எல்லையை விவசாயிகளின் விருப்பத்துக்கேற்ப மாற்றியமைத்து, அதற்கேற்ப ‘டைவா்ஷன்’ ஆணை வழங்கவும், அரசின் ஊக்கத் தொகை கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.