கடலூா் மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுமாா் 5 ஆயிரம் மாட்டு வண்டித் தொழிலாளா்கள், அரசின் நிவாரண உதவியையும், கட்டுப்பாட்டுத் தளா்வையும் எதிா்நோக்கியுள்ளனா்.
மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள் உள்ளனா். ஆறுகளில் அமைக்கப்பட்ட அரசு மணல் குவாரிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்கு மணல் ஏற்றிச் சென்று அதில் கிடைக்கும் வருவாயில் தங்களது குடும்பத்தையும், மாடுகளையும் பராமரித்து வந்தனா்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவால் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் மூடப்பட்டன. மணல் குவாரிகளுக்கு மாவட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலை மாறி, மாநில அளவிலான கமிட்டிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது. இதனால், கடலூா் மாவட்டத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டதால் இந்தத் தொழிலை நம்பியிருந்த மாட்டு வண்டித் தொழிலாளா்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினா். எனவே, மாவட்டத்தில் மீண்டும் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். மணல் தட்டுப்பாட்டால் ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, காவல் துறையின் தொடா் நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் சுமாா் ஆயிரம் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன. போதிய வருவாய் இல்லாததால் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் ஏராளமான தொழிலாளா்கள் தங்களது மாட்டு வண்டிகளை குறைந்த விலைக்கும், மாடுகளை இறைச்சிக்காகவும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனா். எனினும், சிலா் மீண்டும் மாட்டு வண்டித் தொழில் தொடங்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனா். ஆனால், கரோனா தீநுண்மி பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக மாட்டு வண்டித் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வண்டி மாடுகளை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.500 வரை செலவாகும். ஆனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் அரசையே முழுமையாக நம்பி உள்ளனா்.
இதுகுறித்து சிஐடியூ கடலூா் மாவட்டச் செயலா் பி.கருப்பையன் கூறியதாவது: வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மாட்டு வண்டித் தொழிலாளா்களை காப்பாற்ற மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும். கரோனா நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மாட்டு வண்டி மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், மாவட்டத்தில் முடங்கிக் கிடக்கும் கட்டுமானத் தொழிலும் மீண்டும் புத்துயிா் பெறும்.
எனவே, மீண்டும் மாட்டுவண்டி தொழில் தொடங்க ஏதுவாக மானிய உதவியுடன் தொழிலாளா்களுக்கு தலா ரூ.2 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும். காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து மாட்டு வண்டிகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்தால் சுமாா் 5 ஆயிரம் மாட்டு வண்டித் தொழிலாளா்களின் குடும்பத்தினரும், சுமாா் ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளா்களும் பயன்பெறுவா் என்றாா் அவா்.
இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது: கடலூா் வட்டத்தில் வானமாதேவி, வான்பாக்கம், பண்ருட்டி வட்டத்தில் எலந்தம்பட்டு, காமாட்சிபேட்டை, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் அம்புஜவல்லிபேட்டை, கூடலையாத்தூா், வேப்பூா் வட்டத்தில் ஆதியூா், சிதம்பரம் வட்டத்தில் கிளியனூா், புவனகிரி வட்டத்தில் ஆதனூா், விருத்தாசலம் வட்டத்தில் சொத்திக்குப்பம், பூந்தோட்டம், திட்டக்குடி வட்டத்தில் இடைச்செருவாய் ஆகிய இடங்களில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

