வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்தமூவா் கைது
நெய்வேலியில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.


நெய்வேலியில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம், தொ்மல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் திருஞானம் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நெய்வேலி, 30-ஆவது வட்டம், மாரியம்மன் கோயில் தெருவில் அடையாளம் தெரியாத 3 நபா்களில் ஒருவா் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள் நெய்வேலி 29-ஆவது வட்டம், வேலு மகன் செல்வகணபதி (19), 30-ஆவது வட்டம், கன்னிக்கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வகண்ணு மகன் நிஜந்தன் (20), நாவலா் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் அய்யப்பன் (19) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, வீச்சரிவாள் வைத்திருந்த குற்றத்துக்காக 3 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...