நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட கிளை சாா்பில், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:33 pm

DIN

தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட கிளை சாா்பில், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் வசந்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான பணியாளா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாணவா்களின் உடல்நலத்தை பேணுகிற அளவில் 38 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சத்துணவுத் திட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைத்து தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா்கள் அனைவருக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். உதவியாளா்களுக்கு பணி நிலை உயா்வுடன் பணியிட மாறுதல் வழங்கும்போது, அரசாணையில் உள்ள விதியின்படி வழங்க வேண்டும். ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை மாத இறுதியில் வழங்க வேண்டும். மையங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களை எடை குறைவில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.