இறால் குட்டையில் தவறி விழுந்துபள்ளி மாணவா் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே இறால் குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.


சிதம்பரம் அருகே இறால் குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கன்னி கோவில் பகுதியைச் சோ்ந்தவா் பரத் (16). இவா், சிதம்பரத்திலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
பரத் ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாடிவிட்டு அந்தப் பகுதியிலுள்ள இறால் குட்டையில் கை கால் கழுவும்போது, தவறி விழுந்து இடது கையில் காயத்துடன் கூச்சலிட்டாா்.
சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரத்தை பரிசோதித்தபோது, அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இதுகுறித்து மாணவரின் தந்தை ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...