கடலூா்: மேலும் 25 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.


கடலூா் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 24,018 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,043-ஆக உயா்ந்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 23 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,634-ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை உயிரிழப்பு பதிவாகாததால் மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 101 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 337 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 4-ஆக தொடா்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...