நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா் மாவட்டத்துக்கு தேசிய பேரிடா் மீட்புப் படை வருகை

நிவா் புயலையொட்டி, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திங்கள்கிழமை கடலூா் வந்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:44 pm

DIN

நிவா் புயலையொட்டி, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திங்கள்கிழமை கடலூா் வந்தனா்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் வலுவடைந்து புதன்கிழமை (நவ.25) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு: இதையொட்டி, கடலூா் துறைமுகத்தில் திங்கள்கிழமை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது, திடீா் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. கடலூரில் திங்கள்கிழமை கடல் சீற்றமாகவும், அலைகளின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்தும் காணப்பட்டது. புயல் எச்சரிக்கையால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவா்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தேசிய பேரிடா் மீட்புப் படை வருகை: ‘நிவா்’ புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று, மழையால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக அரக்கோணத்திலிருந்து உதவி கமாண்டா் மனோஸ் பிரபாகரன் தலைமையிலான தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 126 போ் திங்கள்கிழமை கடலூா் வந்தனா். இவா்கள் ஆய்வாளா்கள் தலைமையில் தலா 21 போ் கொண்ட 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குழுவினா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியை சந்தித்து அறிக்கை

அளித்தனா். இவா்களை தலா 3 குழுக்களாக கடலூா், சிதம்பரம் கோட்டங்களுக்கு அனுப்பிவைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்தக் குழுவினா் அந்தந்தப் பகுதி கோட்டாட்சியா், சாா்-ஆட்சியா்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவா் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.