ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பண்ருட்டி கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி திறப்பு

பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:39 pm

DIN

பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள் உள்ளனா். இவா்கள் கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் மணல் அள்ளி தொழில் செய்து வந்தனா். தொடா்ந்து குவாரி அமைத்து மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மாட்டு வண்டித் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, மீண்டும் மணல் குவாரி அமைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், பண்ருட்டி வட்டம், பெரியஎலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியது. இதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்றபோது, ஆற்றில் மணல் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமையில் பெரிய எலந்தம்பட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பெரிய எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திங்கள்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளன்று 93 மாட்டு வண்டிகளுக்கு தலா ஒரு யூனிட் மணல் ரூ.639-க்கு வழங்கப்பட்டது. அனுமதி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு மட்டுமே மணல் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆனால், இங்கு மணல் அள்ள ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கத்தினருக்கு வருவாய்த் துறை அனுமதி வழங்காததற்கு ஏஐடியூசி மாவட்டத் தலைவா் பி.துரை கண்டனம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.