பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் காணொலி காட்சிக் மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.


கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் காணொலி காட்சிக் மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 135 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவா்களிடம் காணொலி காட்சி மூலம் ஆட்சியா் குறைகளை கேட்டறிந்தாா்.
சிதம்பரம் வட்டம், கீழ மூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்த செண்பகவள்ளி என்பவா் தீ விபத்தில் உயிரிழந்தமைக்காக அவரது வாரிசுதாரா்களுக்கு நிவாரண நிதியாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...