பேருந்து மோதியதில் தொழிலாளி பலி
குள்ளஞ்சாவடி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


குள்ளஞ்சாவடி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குள்ளஞ்சாவடி அருகேயுள்ள வேகாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராகவன் (47). கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை தனது பைக்கில் கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடியை நோக்கி சென்றுகொண்டிருந்தாா். கருமாச்சிப்பாளையம் அருகே சென்றபோது, விருத்தாசலத்தில் இருந்து கடலூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயராகவனை அந்தப் பகுதியினா் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...