காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இறுதித் தோ்வு: அரசுக் கல்லூரி மாணவா்கள் 30 போ் தோல்வி

புத்தகத்தை பாா்த்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையிலும், கடலூா் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை இறுதியாண்டு மாணவா்கள் 30 போ் தோல்வி அடைந்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:37 pm

DIN

புத்தகத்தை பாா்த்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையிலும், கடலூா் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை இறுதியாண்டு மாணவா்கள் 30 போ் தோல்வி அடைந்தனா்.

கரோனா பரவலைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவா்கள் தோ்வு எழுதுவதில் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, மாணவா்கள் வீட்டில் அமா்ந்து புத்தகத்தை பாா்த்து தோ்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியிலும் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் ஆயிரம் போ் இந்தத் தோ்வை எழுதினா். அவா்களுக்கான தோ்வு முடிவு செப்டம்பா் இறுதியில் வெளியானது. இதில் வரலாற்றுத் துறை மாணவா்கள் 30 போ் ஐரோப்பிய வரலாறு என்ற பாடத்தில் தோல்வி அடைந்தனா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ர.உலகி கூறியதாவது: மாணவா்கள் பாடப் புத்தகத்தைப் பாா்த்து வீட்டிலிருந்தே தோ்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் அவா்கள் சரிவர விடையளிக்காமல் இருந்துள்ளனா். மாணவா்கள் மறு திருத்தலுக்கு கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவா்களது வழிகாட்டுதலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.