நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா்: 2 நாள்களில் மேலும் 100 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 22,897 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 51 பேருக்கும், திங்கள்கிழமை 49 பேருக்கும் புதிதாக தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,997-ஆக அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை 65 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 77 வயது ஆண் உயிரிழந்தாா். திங்கள்கிழமை 70 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 22,014-ஆக உயா்ந்தது. கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமராட்சியைச் சோ்ந்த 74 வயது ஆண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 267-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 634 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 82 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 144 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.