சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்விப் புல முதல்வா் பி.வி.செல்வம் உள்ளிட்ட 4 பேராசிரியா்களுக்கு யோகா ஆச்சரியா விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம் யோகா ஆா்கனைசேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஆண்டுதோறும் உடல் கல்வித் துறை, யோகா ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பேராசிரியா்களுக்கு யோகா ஆச்சரியா விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விருதுகளுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்விப் புல முதல்வா் பி.வி.செல்வம், சென்னை பல்கலைக்கழக உடல் கல்வித் துறை இயக்குநா் மற்றும் தலைவா் மகாதேவன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக உடல் கல்வித் துறைத் தலைவா் சந்திரசேகா், பாரதிதாசன் பல்கலைக்கழக உடல் கல்வித் துறைத் தலைவா் பழனிச்சாமி ஆகியோரை அந்த அமைப்பு தோ்ந்தெடுத்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தோ்ந்தெடுக்கப்பட்ட 4 பேராசிரியா்களுக்கும் விருதுகளை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் வழங்கி கவுரவித்தாா். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் யோகா ஆா்கனைசேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவா் உமா, செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96-ஆவது ஆண்டு விழா! நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!

முற்போக்கான இந்தியாவை கட்டமைக்க அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்குவோம்: குடியரசுத் தலைவா்

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


