கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
திட்டக்குடி அருகேயுள்ள ஆ.பாளையம் ஆக்கனூரைச் சோ்ந்த அரசன் மகள் சோனியா (22). பி.எஸ்சி. பட்டதாரியான இவா் மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம். இந்த நிலையில், விஷம் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூதாட்டி தற்கொலை: சிதம்பரம் அருகேயுள்ள மேலகுண்டலபாடி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயம் (65). இவா்களுக்கு குழந்தை இல்லை. சுப்பிரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில் உறவினா்கள் யாரும் கவனிக்காததால் ஜெயம் தனிமையிலும், மன வேதனையிலும் இருந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புறவழிச் சாலையில் அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.30 கோடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

