காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:38 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 19,687 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,849-ஆக உயா்ந்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 168 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 18,136-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 76 வயது ஆண், மேல்மருவத்தூரில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 72 வயது ஆண், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரியைச் சோ்ந்த 60 வயது ஆண், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 79 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 216-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 1,344 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 153 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 5,511 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.